Published on 23/01/2024 | Edited on 23/01/2024

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் விரைவில் நடக்கவுள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. மூன்றாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றும் முனைப்பில் பாஜகவும், இழந்த ஆட்சியை எப்படியாவது கைப்பற்றியே ஆகவேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் கட்சியும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில், ஏப்ரல் 16 ஆம் தேதி தேர்தலை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் மாநிலத் தேர்தல் அதிகாரிகளுக்குத் தலைமைத் தேர்தல் ஆணையம் வரைவுத் திட்டத்தை வழங்கியுள்ளது. ஏப்ரல் 16 ஆம் தேதிக்கு ஏற்றவாறு தேர்தல் சார்ந்த பணிகளை வகுக்குமாறு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.