வெளிநாடுகளில் இருந்து நிதிப் பெறுவதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் வரை நிதிப் பெறும் வகையில், விதிகளில் திருத்தும் செய்யப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் உள்ள தங்களது உறவினர்களிடம் இருந்து, ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை மட்டுமே அரசின் அனுமதியின்றி, நிதிப் பெறமுடியும் என்ற விதி இருந்தது. தற்போது ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் வரை நிதிப் பெறும் வகையில், வெளிநாட்டு நிதி ஒழுங்காற்றுச் சட்ட விதிகளில் மத்திய உள்துறை அமைச்சகம் திருத்தங்களையே செய்துள்ளது.
இதைவிட, கூடுதலாகத் தொகையைப் பெறுவதாக இருந்தால், அரசுக்கு 90 நாட்களுக்கு முன்பே தெரிவிக்க வேண்டும் என்றும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல், தன்னார்வ அமைப்புகளுக்கும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து நிதிப் பெறும் தன்னார்வ அமைப்புகள், தங்கள் வங்கிக் கணக்கு விவரத்தை 45 நாட்களுக்கும் முன்பே உள்துறை அமைச்சகத்திடம் தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.