![sena](http://image.nakkheeran.in/cdn/farfuture/VzcechUBaL5TsoY41hdARtDpGqHSy5O9ARB3o_Npp-A/1533347678/sites/default/files/inline-images/shiv-sena-in-up.jpg)
ராமரை கடுமையாக விமர்சனம் செய்த சமாஜ்வாதி தலைவர் நரேஷ் அகர்வாலை பாஜகவில் சேர்த்தது தான் தோல்விக்கு காரணம். அவரைச் சேர்த்ததால் ராமர் கோபமடைந்து பாஜகவை தோற்கடித்தார் என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்தார்.
சமாஜ்வாடி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் இணைந்து போட்டியிட்டதால் பாஜக தோற்றது என்று நான் நினைக்கவில்லை. நரேஷ் அகர்வாலுக்கு பாஜக சிவப்புக்கம்பள வரவேற்பு கொடுத்ததை ராமர் விரும்பவில்லை என்று சஞ்சய் ராவத் கூறினார்.