/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/paytm434555.jpg)
புதிய வாடிக்கையாளர்களைச் சேர்க்க 'Paytm' நிறுவனத்திற்கு தடை விதித்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, ரிசர்வ் வங்கியின் தலைமை பொது மேலாளர் யோகேஷ் தயாள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "இந்திய ரிசர்வ் வங்கி இன்று, அதன் அதிகாரங்களைப் பயன்படுத்தி, வங்கி ஒழுங்குமுறைச் சட்டம், 1949 இன் பிரிவு 35A இன் கீழ், Paytm Payments Bank Ltd- ஐ புதிய வாடிக்கையாளர்களைச் சேர்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வங்கி அதன் தகவல் தொழில்நுட்ப அமைப்பின் விரிவான கணினி தணிக்கையை நடத்த ஒரு ஐடி தணிக்கை நிறுவனத்தை நியமிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பணப்பரிவர்த்தனை விதியை முறையாகப் பின்பற்றாத காரணத்தால் புதிய வாடிக்கையாளர்களைச் சேர்க்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. Paytm Payments Bank Ltd மூலம் புதிய வாடிக்கையாளர்களைச் சேர்ப்பது, IT ஆடிட்டர்களின் அறிக்கையை மதிப்பாய்வு செய்த பிறகு ரிசர்வ் வங்கி வழங்கும் குறிப்பிட்ட அனுமதிக்கு உட்பட்டது." இவ்வாறு ரிசர்வ் வங்கி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)