ரிசர்வ் வங்கியின் ஆளுநர் பொறுப்பேற்றுள்ள சக்தி காந்த தாஸ் தலைமையில் ரிசர்வ் வங்கியின் இயக்குநர் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
ரிசர்வ் வங்கியின் ஆளுநர் பொறுப்பில் இருந்து உர்ஜித் படேல் கடந்த திங்கள் அன்று திடீரென தனது சொந்தக் காரணங்களுக்காக தன் பதவியை ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்தி காந்த தாஸ் பதவியேற்றார். இன்று இவரின் தலைமையில் இயக்குநர் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில், ஏற்கனவே கடந்த நவம்பர் 19-ம் தேதி நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளில் என்ன முன்னேற்றங்கள் அடைந்துள்ளது, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையினருக்கு கடன் கிடைப்பது, பண மதிப்பு நீக்கம் மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி எனும் ஜிஎஸ்டி அமலாக்கத்தால் நிதிப் புழக்கம் குறைந்துள்ள சிறு மற்றும் குறு தொழில் துறையினருக்கு போதிய நிதி கிடைப்பதற்கான வழி என்ன என்பதைக் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தெரிகிறது.