Published on 27/10/2020 | Edited on 27/10/2020
மத்திய இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.
நாடு முழுவதும் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் களப் பணியாளர்களான தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர், மருத்துவர்கள், அரசு ஊழியர்கள், அமைச்சர்கள் ஆகியோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில், மத்திய இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். பாதிப்புகள் தீவிரமாக இல்லாதபோதும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் பம்பாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் தொடங்கிய காலகட்டத்தில் 'கோ கரோனா கோ' எனக் கோஷமெழுப்பியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.