Published on 25/06/2019 | Edited on 25/06/2019
ஹரியானா மாநிலம் சிர்சா நகரில், 'தேரா சச்சா சவுதா' என்ற பெயரில் ஆசிரமம் நடத்திவந்தவர் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங். ஆன்மீக கூட்டங்கள் நடத்துவது, சொந்த தயாரிப்பில் படமெடுத்து ஹீரோவாக நடிப்பது என பிரபலமான ராம் ரஹீம், பெண் துறவிகள் இரண்டு பேரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டார்.
![ram rahim came out of jail to do agriculture](http://image.nakkheeran.in/cdn/farfuture/qAtNJAMCcleL8RVdsUQDa7916mAgP2wkUL2vWCeT8R4/1561446745/sites/default/files/inline-images/ramrahim.jpg)
இந்த வழக்கில் விசாரணை முடிவுற்று, அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவர் ரோத்தக் நகரில் உள்ள சோனாரியா சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், தனக்கு சொந்தமான நிலம் வெகு நாட்களாக தரிசாக கிடப்பதால் விவசாயம் செய்ய வெளியே செல்ல அனுமதிக்குமாறு பரோல் கேட்டு விண்ணப்பித்திருந்தார். இதன் அடிப்படையில் சிறையில் அவரது நன்னடத்தையை கருத்தில் கொண்டு விவசாயம் செய்வதற்காக 42 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது.