Skip to main content

10 சதவீத இட ஒதுக்கீடு வரலாற்றில் நிச்சயம் இடம் பெறும் - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

Published on 31/01/2019 | Edited on 31/01/2019
ram nath kovindபாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. 2019ஆம் ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், மக்களவை மற்றும் மாநிலங்களவையின் கூட்டுக் கூட்டத்தில் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். 
 

அப்போது அவர், நாட்டின் வளர்ச்சிக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி, மக்கள் பயன்பெறும் வகையில் செயல்பட்டு வருகிறது. பிரதமர் மோடி தலைமையிலான இந்த அரசு, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கவே இரவு பகலாக உழைத்து வருகிறது. 
 

ஏழை எளிய மக்களுக்கு உதவிடவே மத்திய அரசு கடுமையாக உழைக்கிறது. இதனை முன்னிட்டு  ஆயுஷ்மான் பாரத் யோஜனா எனும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் 4 மாதத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றுள்ளனர். ஏழை, எளிய பெண்களின் தரத்தினை மேலும் உயர்த்த மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 75000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. 
 

கல்வித் தரத்தை மேம்படுத்த மாணவர்களுக்கு புதிய கல்வி வாய்ப்புகளை உருவாக்க அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் வரலாற்று சிறப்பு பெறூம் வகையில், மதுரை மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது.  இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் விரைவிலேயே மின்சாரம் இல்லாத வீடே இல்லை எனும் நிலை உருவாக்கப்படும். இவையனைத்துக்கும் மேலாக பொது பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு வரலாற்றில் நிச்சயம் இடம் பெறும். 
 

அனைத்து துறைகளிலும் சம வளர்ச்சிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சுகாதார திட்டங்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நகரமாக இருந்தாலும் சரி, கிராமமாக இருந்தாலும் சரி அனைத்து இடங்களிலும் சுகாதார உள்கட்டமைப்புகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 

ரூ. 1000, ரூ.500 நோட்டுகளை செல்லாது என்று அறிவித்ததன் மூலம் கருப்பு பணத்தின் வேர் வெட்டப்பட்டுள்ளது. பினாமி முறையில் சொத்து சேர்ப்பதற்கு தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
 

கருப்பு பணத்தை ஒழிக்க எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கைகள் காரணமாக ரியல் எஸ்டேட் துறை சீரடைந்துள்ளது. வீடுகள் மற்றும் சொத்துக்களின் விலை குறைந்துள்ளன.
 

சரக்கு மற்றும் சேவை வரியால் நீண்ட காலத்துக்கு நன்மை கிடைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கும், உள்கட்டமைப்பு பணிகளுக்கும் ஜி.எஸ்.டி. வரி மிகவும் கை கொடுக்கும். இவ்வாறு அவர் பேசினார்.  
 

 

 

 


 

சார்ந்த செய்திகள்

 

Next Story

தற்காலிக சபாநாயகர் நியமனம்; காங்கிரஸ் எதிர்ப்பு

Published on 20/06/2024 | Edited on 20/06/2024
Appointment of Temporary Speaker; Opposition to Congress

நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு பாஜக தலைமையிலான கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளது. இந்நிலையில் தற்போது மக்களவையின் தற்காலிக சபாநாயகர் குறித்த உத்தரவை இந்திய குடியரசுத் தலைவர் வெளியிட்டுள்ளார்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் அறிவிப்பின்படி மக்களவையின் தற்காலிக சபாநாயகராக பர்த்ருஹரி மஹ்தப் நியமிக்கப்பட்டுள்ளார். புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட எம்பிக்களுக்கு தற்காலிக சபாநாயகர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார் எனவும், எம்பிக்கள் பதவியேற்ற பிறகு மக்களவையின் புதிய சபாநாயகருக்கான தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதேநேரம் தற்காலிக சபாநாயகர் நியமனத்திற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தற்காலிக சபாநாயகர் நியமனத்தில் நாடாளுமன்ற விதிகளை பாஜக மீதியுள்ளது என தெரிவித்துள்ள காங்கிரஸ், சபாநாயகர் தேர்தலுக்கு முன் மூத்த எம்.பி தான் அவைக்கு தலைமை தாங்க வேண்டும் என்பது விதி. 8 முறை எம்பியாக இருந்த காங்கிரசின் கொடி குன்னிலை நியமிக்கவில்லை. தற்காலிக சபாநாயகராக தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பர்த்ருஹரி மஹ்தப்  ஏழு முறை மட்டுமே எம்.பியாக இருந்தவர் என காங்கிரஸ் விமர்சனத்தை வைத்துள்ளது.

Next Story

'எல்லாம் சமஸ்கிருதமா?'-அமித்ஷாவுக்கு பறந்த கடிதம்

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
'Everything is Sanskrit?'- Tamil Nadu Chief Minister's letter to Amit Shah

புதிதாக நிறைவேற்றப்பட்ட மூன்று குற்றவியல் நடைமுறை சட்டங்கள் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக முதல்வர் எழுதியுள்ள அந்த கடிதத்தில் மூன்று குற்றவியல் சட்டங்களுக்கும் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் அதில், 'மத்திய அரசின் மூன்று சட்டங்கள் குறித்து கருத்து தெரிவிக்க தங்களுக்கு (மாநிலங்களுக்கு) அவகாசம் தரப்படவில்லை. இந்த மூன்று சட்டங்களுக்கும் எந்த ஆலோசனையும் இல்லாமல் அவசரகதியில் நிறைவேற்றப்பட்டுள்ளன. நிறைவேற்றப்பட்ட புதிய குற்றவியல் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் மாநில அரசுகளுக்கு சில சிக்கல்கள் உள்ளது.

எதிர்க்கட்சிகளின் பங்கேற்பு இல்லாமலேயே புதிய மூன்று குற்றவியல் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா என சட்டங்களின் பெயர்கள் அனைத்தும் சமஸ்கிருதத்தில் பெயரிடப்பட்டுள்ளன. சட்டங்கள் ஆங்கிலத்தில் இருப்பது கட்டாயம். சட்டங்களில் சில அடிப்படை பிழைகள், முரண்பாடுகள் உள்ளது. எனவே புதிய குற்றவியல் நடைமுறை சட்டங்களை நிறுத்தி வைக்க வேண்டும்' என தமிழக முதல்வர் கடிதம் வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.

மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட மூன்று குற்றவியல் சட்டங்கள் ஜூலை ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் தமிழக முதல்வரின் இந்த கடிதம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.