Skip to main content

ராமர் கோவில் அறக்கட்டளை வங்கி கணக்கில் மிகப்பெரிய மோசடி!!! வழக்குப்பதிவு செய்த போலீஸார்...

Published on 10/09/2020 | Edited on 10/09/2020

 

ram mandir bank account issue

 

 

ராமர் கோவில் அறக்கட்டளையின் வங்கிக்கணக்கில் போலி காசோலை மூலம் ஆறு லட்சம் வரை பணம் எடுக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. 

 

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியதை தொடர்ந்து, கோவில் கட்டுமான பணிகளைக் கவனித்துக்கொள்ள ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்தஷேத்ரா என்ற அறக்கட்டளை அமைக்கப்பட்டது. இந்த அறக்கட்டளைக்கு உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் நிதியளித்து வருகின்றனர். கடந்த மாதம் வரை ரூ.30 கோடிக்கும் அதிகமாக இந்த அறக்கட்டளைக்கு நிதி வசூலாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த சூழலில், பூமி பூஜையுடன் கோவில் கட்டுமான பணிகள்  கடந்த மாதம் துவங்கின. இந்நிலையில், ராமர் கோவில் அறக்கட்டளையின் வங்கிக்கணக்கில் போலி காசோலை மூலம் ஆறு லட்சம் வரை பணம் எடுக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

 

போலி காசோலைகளைப் பயன்படுத்தி மர்மநபர் ஒருவர் இரண்டு முறை பணம் எடுத்ததாகவும், மோசடியில் ஈடுபட்டவர்  மூன்றாவது முறையாக பணத்தை எடுக்க முயன்றபோது, ​​ஸ்ரீ ராம ஜென்ம பூமி  தீர்த்த க்ஷேத்ரா பொதுச்செயலாளர் சம்பத் ராய் தொலைபேசியில் காசோலையைத் திரும்ப பெறுவது குறித்து தகவல் கிடைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மோசடி செய்தவர் மீது அயோத்தி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், ரூ.6 லட்சம் வரை மோசடி நடந்து இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்