ரக்ஷா பந்தனை முன்னிட்டு, பெண்களுக்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டார் ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார்.
ரக்ஷா பந்தன் கொண்டாட்டங்களுக்காக, ஹரியானாவில் வியாழக்கிழமை நள்ளிரவு வரை அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றிப் பயணிக்கலாம் என அம்மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் அறிவித்துள்ளார்.
வட மாநிலங்களில் வியாழக்கிழமை ரக்ஷா பந்தன் கொண்டாடப்படவுள்ளது. அதனையொட்டி, ரக்ஷா பந்தன் பரிசாக ஹரியானாவில் நள்ளிரவு 12.00 மணி வரை மாநில அரசுப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றிப் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.