Skip to main content

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: அமளியால் ஒத்திவைக்கப்பட்ட மாநிலங்களவை!

Published on 08/03/2021 | Edited on 08/03/2021

 

rajya sabha

 

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி மாத இறுதியில் தொடங்கப்பட்டு, பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதங்கள் நடந்து முடிந்து, மக்களவை மற்றும் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டன. இந்தநிலையில் பட்ஜெட் தொடரின் இரண்டாவது அமர்வில், மாநிலங்களவை இன்று (08.03.2021) கூடியது.

 

மாநிலங்களவை தொடங்கிய சிறிது நேரத்திலேயே, எரிபொருள் விலை உயர்வு குறித்து விவாதிக்க வேண்டுமென கோரி காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து மாநிலங்களவை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவை சபாநாயகருமான வெங்கையா நாயுடு அறிவித்தார். 11 மணிக்கு மீண்டும் அவை கூடியபோதும் அமளி தொடர்ந்ததால், மாநிலங்களவை 1 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

 

இதற்கு முன்பாக எரிபொருள் விலை உயர்வு குறித்து பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே, பெட்ரோல் மற்றும் டீசல் விலை முறையே, கிட்டத்தட்ட லிட்டருக்கு ரூ.100 மற்றும் ரூ. 80 ரூபாய் அளவில் விற்கப்படுகிறது. கேஸ் சிலிண்டர் விலையும் உயர்ந்துள்ளது. கலால் வரி / செஸ் விதிக்கப்பட்டதன் மூலம் ரூ. 21 லட்சம் கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் உட்பட மொத்த நாடும் பாதிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்