raj

Advertisment

இந்தி மொழி அழகான மொழி தான், ஆனால் அதனை நமது தேசிய மொழியாக ஏற்றுக்கொள்ள முடியாது என மகாராஷ்டிர நவநிர்மான் சேனா அமைப்பின் தலைவர் ராஜ் தாக்ரே கூறியுள்ளார். மும்பையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்தியாவில் இந்தி மட்டுமின்றி தமிழ், மராத்தி, குஜராத்தி போன்ற மொழிகளும் உள்ளன. எனவே இந்தியை மட்டும் தேசிய மொழியாக அறிவிக்க முடியாது என கூறினார். மேலும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை பற்றி பேசிய அவர், சொந்த மாநிலத்தை சேர்ந்த இளைஞர்களுக்கே வேலைகளில் அந்தந்த மாநிலங்கள் முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும் கூறினார்.