Skip to main content

சோனியாவுக்கு பிரசவம் பார்த்த நர்ஸ் ராஜம்மாவை சந்தித்து மகிழ்ந்த ராகுல்!

Published on 09/06/2019 | Edited on 09/06/2019

 


 ராஜீவ் காந்தி - சோனியா தம்பதியரின் மூத்த மகனாக 19-6-1970 அன்று ராகுல் காந்தி பிறந்தார்.   தற்போது காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக பதவி வகிக்கும் ராகுல் காந்தி, கடந்த பாராளுமன்ற தேர்தலில் கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு தொகுதியில் போட்டியிட்டு 4 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.  வயநாடு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கடந்த இரு நாட்களாக ராகுல் காந்தி இங்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறார். 

 

r


சுல்தான் பத்தேரி உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று திறந்த வாகனத்தில் சென்று மக்களை சந்தித்த அவர் இன்று கோழிக்கோடு பகுதிக்கு வந்தார்.  அப்போது, சோனியா காந்தியின் தலைப்பிரசவத்தின்போது நர்சாக இருந்து உதவிய செவிலி ராஜம்மா என்பவர் பணி ஓய்வுக்கு பின்னர் கோழிக்கோட்டில் இருப்பதை அறிந்த ராகுல், அவரை சந்திக்க விருப்பம் தெரிவித்தார்.  இதைதொடர்ந்து, அவரது வீட்டுக்கு சென்ற ராகுல், தனக்கு பிரசவம் பார்த்த ராஜம்மாவை கட்டித்தழுவி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“நாடாளுமன்ற அத்துமீறலின் போது பா.ஜ.க எம்.பி.க்கள் பயந்து ஓடிவிட்டனர்’ - ராகுல் காந்தி விமர்சனம்

Published on 22/12/2023 | Edited on 22/12/2023
Rahul Gandhi crictizes BJP MPs ran away in fear during Parliament encroachment

நாடாளுமன்றத் தாக்குதல் நினைவு தினமான கடந்த 13 ஆம் தேதி, மீண்டும் நாடாளுமன்ற மக்களவையினுள் பாதுகாப்பு அத்துமீறல் நடந்தது. கடந்த 13ம் தேதி நாடாளுமன்றக் கூட்டத்தொடர் வழக்கம்போல் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, நாடாளுமன்ற வளாகத்தில் பார்வையாளர்களாக வந்திருந்த இரண்டு நபர்கள் வண்ணப் புகையை அவை முழுக்க வீசிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்றும், நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் வந்து, பாதுகாப்பு மீறல் குறித்து விளக்கம் தர வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை வைத்து நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். அமளியில் ஈடுபட்ட கனிமொழி உள்ளிட்ட 14 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வந்தனர். மேலும், இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை வைத்து வந்ததால், இந்த இரு அவைகளிலும் எந்த ஒரு விவாதமும் நடத்தப்படாமல் இருந்தது. இதையடுத்து, இதுவரை மொத்தமாக இந்த கூட்டத்தொடரில் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்களின் எண்ணிக்கை 146 ஆக அதிகரித்துள்ளது.

இந்த சஸ்பெண்ட் நடவடிக்கையை எதிர்த்து இந்தியா கூட்டணிக் கட்சிகள் இன்று (22-12-23) ஒன்றிணைந்து நாடு தழுவிய போராட்டத்தை நடத்தி வருகின்றன. அந்த வகையில், டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மற்றும் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பலரும் பங்கேற்றனர். 

இந்தப் போராட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “சில இளைஞர்கள் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து புகை குப்பிகளை வீசியவுடன், தங்களை தேச பக்தர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பா.ஜ.க எம்.பி.க்கள் ஓடிவிட்டனர். நாங்க இந்த காட்சியை நேரில் கண்டோம். ஆனால் ஊடகங்களில் அது ஒளிபரப்பப்படவில்லை. நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் குறித்த சம்பவத்தில் ஒரு கேள்வி இருக்கிறது. அத்துமீறி நுழைந்தவர்கள் ஏன் இந்த வழியில் எதிர்ப்பு தெரிவித்தனர்.

நாட்டில் உள்ள வேலையில்லாத் திண்டாட்டம்தான் இதற்குப் பதில். ஆனால், நாட்டிலுள்ள வேலையில்லாத் திண்டாட்டம் பற்றி எந்த ஊடகங்களும் பேசவில்லை. ஆனால், இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் நாடாளுமன்றத்துக்கு வெளியே அமர்ந்து போராட்டம் செய்து கொண்டிருந்தபோது, நான் பதிவு செய்த வீடியோவைப் பற்றி அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்” என்று கூறினார். 

Next Story

திடீரென ஓடிய ராகுல் காந்தி... வைரலாகும் வீடியோ

Published on 30/10/2022 | Edited on 30/10/2022

 

 A Sudden Running Race...  unity journey

 

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி  இந்தியா முழுவதும் சுமார் 12 மாநிலங்களில் 3,570 கிலோ மீட்டர் நடைப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து உரையாடி வருகிறார். இந்த பயணத்திற்கான திட்ட ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டு கன்னியாகுமரியிலிருந்து நடை பயணத்தை கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி ராகுல் துவங்கினார்.

 

இந்நிலையில் தெலுங்கானாவில் ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி சாலையில் நடந்து செல்கையில் அங்கிருந்த சிறுவர்களுடன் பேசிக்கொண்டே நடந்து கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென மாணவர்களுடன் சேர்ந்து ரன்னிங் ரேஸில் ஈடுபட்டார். அவர் ஓடிய நிலையில் அங்கு பாதுகாப்புக்கு இருந்த காவலர்கள், பொதுமக்கள், கட்சியினர் என அனைவருமே சேர்ந்து ஓட்டப்பந்தயத்தில் ஈடுபட்டனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.