
தூங்கி கொண்டிருக்கும் மத்திய அரசை எழுப்ப காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று நள்ளிரவு டெல்லி இந்தியா கேட் பகுதியில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி - போராட்டம் நடத்தினார். இந்த பேரணியில் பிரியங்கா வதேரா அவரது கணவர் ராபர்ட் வதேரா, குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் தொண்டர்களும் பங்கேற்றனர்.



ஜம்மு ஜாஷ்மீரின் கத்துவாவில் 8 வயது சிறுமி வன்கொடுமை செய்யபட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகியுள்ளவரை விடுவிக்க கோரி அம்மாநில பாஜக அமைச்சர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். உத்தரப்பிரதேசம் உனா நகரில் பா.ஜ.க எம்.எல்.ஏ மீது பாலியல் பலாத்கார புகார் கொடுத்த தந்தை போலீஸ் கஸ்டடியில் இருந்து மரணமடைந்தார்.
இந்த சம்பவங்களை கவனிக்காமல் தூங்கிக்கொண்டிருக்கும் மத்திய அரசை எழுப்புவதற்காகவும், பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தியும் ராகுல்காந்தி நள்ளிரவு போராட்டம் நடத்தினார்.