Skip to main content

"தலைகீழாக மாற்றியுள்ளனர்"... புள்ளிவிவரங்களுடன் பிரதமர், நிதியமைச்சரை விமர்சித்த ராகுல்...

Published on 29/01/2020 | Edited on 29/01/2020

2020 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜனவரி 31 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், பிரதமர், மற்றும் நிதியமைச்சரை ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

 

rahul gandhi tweet about budget 2020

 

 

இந்நிலையில், மோடி மற்றும் நிர்மலா சீதாராமனை தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ள ராகுல், "மோடியும் அவரது பொருளாதார ஆலோசகர்களின் கனவுக் குழுவும் உண்மையில் நமது பொருளாதாரத்தை தலைகீழாக திருப்பியுள்ளனர்.

முன்னதாக:

மொத்த உள்நாட்டு உற்பத்தி: 7.5%
பணவீக்கம்: 3.5%

இப்போது:

மொத்த உள்நாட்டு உற்பத்தி: 3.5%
பணவீக்கம்: 7.5%

அடுத்து என்ன செய்வது என்று பிரதமருக்கும், நிதியமைச்சருக்கும் சுத்தமாக தெரியாது" என பதிவிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

ஜூலை 23 ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல்!

Published on 06/07/2024 | Edited on 06/07/2024
July 23 central budget presentation

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி வெற்றிப்பெற்று 3 வது முறையாக மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்துள்ளது. இந்த நிலையில் 2024-2025 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 22 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பில் ஜூலை 23 ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 23 ஆம் தேதி பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். ஏற்கெனவே கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தற்போது முழுபட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. 

தேசிய ஜனநாயக் கூட்டணியில் முக்கிய பங்கு வகிக்கும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இருவரும் தங்களது மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று பிரதமரை சந்தித்து கோரிக்கை வைத்திருந்தனர். இது நாடாளுமன்ற பட்ஜெட்டில் எந்த மாதிரியான மாற்றங்களைக் கொண்டு வரும் எனப் பலரும் எதிர்பார்க்கப்படுகின்றனர். மேலும் விலை வாசி உயர்வு, வேலை வாய்ப்பு இன்மை தொடர்பான அறிவிப்புகள் மத்திய பட்ஜெட்டில் இடம் பெறலாம் என்றும் கூறப்படுகிறது. 

Next Story

“சொந்த மாநிலத்தில் மோடியை தோற்கடிப்போம்” - ராகுல் காந்தி பேச்சு

Published on 06/07/2024 | Edited on 06/07/2024
Rahul Gandhi speech they will defeat Modi in our own state

கடந்த 1ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை பேரவையில் எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராகுல் காந்தி முதல் முறையாக உரையாற்றினார். அப்போது, ராகுல்காந்தி மற்றும் பாஜக உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. நீட் தேர்வு, அக்னி வீரர் திட்டம், பணமதிப்பிழப்பு உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் குறித்து ராகுல்காந்தி பாஜகவுக்கு கேள்வி எழுப்பி இருந்தார். 

குறிப்பாக அவர், “பாஜகவினர் உண்மையான இந்துக்கள் அல்ல. உண்மையான இந்துக்கள் வெறுப்பு, வன்மம் ஆகியவற்றை தூண்ட மாட்டார்கள். ஆனால், பாஜகவினர் வெறுப்பை விதைக்கிறார்கள். 24 மணி நேரமும் பாஜகவினர் வெறுப்பை விதைத்து வருகின்றனர். பாஜகவும், பிரதமர் மோடியும் இந்துக்களின் ஒட்டுமொத்த பிரதிநிதி அல்ல' என பல்வேறு குற்றச்சாட்டுகளை சாரம்சமாக வைத்து ராகுல் காந்தி உரையாற்றியிருந்தார். அதேநேரம் இந்துக்கள் குறித்த பேச்சுக்கு ராகுல் மன்னிப்பு கேட்கவேண்டும் என வலியுறுத்திய பாஜக எம்.பிக்கள், ராகுலின் கேள்விகளுக்கு பதிலளித்ததோடு கண்டனங்களையும் தெரிவித்தனர். இதனால் நாடாளுமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ராகுல் காந்தி பேசியதன் எதிரொலியாக குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் பா.ஜ.கவினர் போராட்டம் நடத்தினர். அப்போது, பா.ஜ.க இடையே காங்கிரஸ் தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதனால், ஐந்து காங்கிரஸ் தொண்டர்களை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவத்தைக் கண்டித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று அகமதாபாத்தில் உள்ள காங்கிரஸ் தொண்டர்களுக்கு ஆறுதல் தெரிவித்து பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினர். அப்போது அவர், “நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து குஜராத்தில் அவர்களை தோற்கடிக்கப் போகிறோம். நரேந்திர மோடியையும் பா.ஜ.கவையும் அயோத்தியில் தோற்கடித்தது போல் குஜராத்தில் தோற்கடிப்போம். 

விமான நிலையம் கட்டப்பட்டபோது அயோத்தி விவசாயிகள் தங்கள் நிலத்தை இழந்தனர். ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு அயோத்தியில் இருந்து யாரையும் அழைக்காததால் அயோத்தி மக்கள் கொந்தளித்தனர். அயோத்தியை மையமாக கொண்டு அத்வானி தொடங்கிய இயக்கம், அயோத்தியில் அந்த இயக்கத்தை இந்தியா கூட்டணி தோற்கடித்துள்ளது.

நமது அலுவலகத்தை அவர்கள் உடைத்த விதத்தில், நாம் அவர்களின் ஆட்சியை உடைக்கப் போகிறோம். ஆனால், குஜராத் காங்கிரசில் குறைபாடுகள் உள்ளன. கடந்த தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்த்து சரியாக போட்டியிடவில்லை. 2017ஆம் ஆண்டில் 3 மாதங்கள் கடுமையாக உழைத்து நல்ல பலன் கிடைத்தது. இப்போது நமக்கு 3 வருடங்கள் உள்ளன, இறுதிக்கட்டத்தை பின்தள்ளுவோம். 30 ஆண்டுகளுக்குப் பிறகு குஜராத்தில் ஆட்சி அமைக்கப் போகிறீர்கள். கட்சித் தலைமை, நான், என் சகோதரி உட்பட அனைவரும் உங்களுடன் நிற்கப் போகிறோம்” எனக் காங்கிரஸ் தொண்டர்களிடம் பேசினார்.