இந்தியாவில் கரோனா பரவல் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தி வரும் சூழலியல், தினசரி மூன்று லட்சம் பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி வருகிறது. பலி எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்திய அரசாங்கம் கரோனாவை கையாளும் விதம் குறித்து ராகுல் காந்தி உட்பட பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.
இந்தநிலையில் ராகுல் காந்தி, பிரதமர் மோடியையும் பி.எம் கேர்ஸ் நிதியில் வாங்கப்படும் வென்டிலேட்டர்களையும் ஒப்பிட்டு விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், "பிரதமருக்கும்,பி.எம் கேர்ஸ் வென்டிலேட்டர்களுக்கும் நிறைய விஷயங்கள் பொதுவாக உள்ளன. 1. மிகவும் அதிகமான பொய் விளம்பரங்கள். 2. அவர்கள் செய்யவேண்டிய வேலையைச் செய்யாமல் இருப்பது. 3. தேவைப்படும்போது கண்ணிலேயே படாமல் இருப்பது. இவையெல்லாம் இரண்டிற்கும் பொதுவானதாக இருக்கிறது" எனக் கூறியுள்ளார்.