
இந்தியாவில் தற்போது கரோனாபரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கரோனாதடுப்பூசி செலுத்தும் பணிகளை வேகப்படுத்த முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு அங்கமாக 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கரோனாதடுப்பூசி செலுத்த மத்திய அரசு நேற்று (19.04.2021) அனுமதியளித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, மே ஒன்றாம் தேதியிலிருந்துதடுப்பூசி நிறுவனங்களிடமிருந்து தடுப்பூசிகளை நேரடியாக வாங்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. மேலும், இந்திய அரசின் தடுப்பூசி மையங்களில் கரோனாதடுப்பூசி செலுத்துவது வழக்கம் போல தொடரும் என்றும், முன்பு வரையறுக்கப்பட்ட தகுதியான மக்களுக்கு அதாவது சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் 45 வயதுக்குமேற்பட்டவர்கள் ஆகியோருக்கு கரோனாதடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் எனவும்மத்திய அரசு அறிவித்தது.
இதனால், 45 வயதுக்கும் குறைவானவர்களிடம் தடுப்பூசிக்குகட்டணம் வசூலிக்கப்படுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், தடுப்பூசி தொடர்பான மத்திய அரசின் நேற்றைய அறிவிப்பைராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "18 முதல் 45 வயதானோருக்கு இலவச தடுப்பூசி இல்லை. விலை கட்டுப்பாடுகள் இல்லாமல் (தடுப்பூசி விற்பனையில்) இடைத்தரகர்கள் உள்ளே கொண்டுவரப்பட்டுள்ளனர். பலவீனமான பிரிவுகளுக்குத் தடுப்பூசி உத்தரவாதமில்லை. இது இந்திய அரசின் பாரபட்சமான தடுப்பூசி திட்டம். தடுப்பூசி விநியோக திட்டமில்லை" என தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)