Rahul Gandhi says Modi's promise is to deliver everything Adani wantsGandhi says Modi's promise is to deliver everything Adani wants

Advertisment

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் தேதியைக் கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி அன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பிருந்தே இந்த ஐந்து மாநிலங்களிலுமே அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தங்கள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்தனர். சில இடங்களில் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சத்தீஸ்கர் மாநிலத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 7 ஆம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று முடிந்தது. அதேபோல், மிசோரம் மாநிலத்திலும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டாம் கட்ட தேர்தல் வரும் நவம்பர் 17 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ், பா.ஜ.க என அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், சத்தீஸ்கர் மாநிலம் பெமேதரா மாவட்டத்தில் காங்கிரஸ் சார்பில் இன்று (15-11-23) தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், “சத்தீஸ்கரில்காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ஆண்டு தோறும் ரூ.15,000 உதவித்தொகையாக வழங்கப்படும். மேலும், இந்த மாநிலத்தில் மழலையர் முதல் முதுகலைப் படிப்பு வரை படிக்கும் அனைத்தும் மாணவர்களுக்கும் இலவச கல்வி வழங்கப்படும். பிரதமர் மோடி ஒவ்வொரு மாநிலத்திற்கும் சென்று வாக்குறுதிகளை அளித்து வருகிறார். அவர் கொடுக்கும் அனைத்து வாக்குறுதிகளும் அதானியுடைய வாக்குறுதிகள் தான். அந்த வாக்குறுதிகள் என்னவென்றால், அதானிக்கு என்னவெல்லாம் வேண்டுமோ, என்னென்ன வசதிகள் வேண்டுமோ அவை அனைத்தையும் பிரதமர் மோடி கொடுப்பார் என்பதே. அதனால், அதானி விரும்பும் அனைத்தையும் கொடுப்பதே மோடியின் வாக்குறுதி” என்று பேசினார்.