நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பொதுக்கூட்டத்துக்காக தமிழ்நாடு வந்துள்ளார்.
இன்று காலை ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரியில் மாணவர்களுடன் கலந்துரையாடல் மேற்கொண்டார். அதன்பின் பேசிய அவர், "நாடு முழுவதும் வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும். ஜிஎஸ்டி மற்றும் ரூபாய் நோட்டு நடவடிக்கை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும். மேலும் நீட் விவகாரத்தில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் கூறினார். இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது ரபேல் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றும் 7 பேர் விடுதலை விவகாரத்தில் விரைவானநடவடிக்கை தேவை என்றும் ராகுல் காந்தி கூறினார்.