Skip to main content

உண்மை எவ்வளவு அழகாக தன்னை வெளிக்கொண்டு வந்துள்ளது! - நரேந்திர மோடி மைதானம் குறித்து ராகுல் காந்தி!

Published on 24/02/2021 | Edited on 24/02/2021

 

rahul gandhi

 

குஜராத் மாநிலம் மோட்டேராவில் 800 கோடி செலவில் உருவாக்கப்பட்டு, கடந்த ஆண்டு, முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தியப் பிரதமர் மோடியோடு இணைந்து திறந்து வைத்த மைதானமே உலகின் மிகப்பெரிய மைதானமாகும். இந்த மைதானத்தில், ஒரு லட்சத்து இருபத்து நான்கு பேர் அமர்ந்து போட்டியைப் பார்க்கலாம். முதலில் ‘சர்தார் வல்லபாய் படேல் மைதானம்’ எனப் பெயரிடப்பட்ட மைதானம், இன்று 'நரேந்திர மோடி மைதானம்' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 

மேலும், இந்த மைதானத்தின் பந்து வீச்சு முனைகளுக்கு, ரிலையன்ஸ் முனை எனவும், அதானி முனை எனவும் பெயரிடப்பட்டுள்ளது. இந்தநிலையில் மோடி அரசு பெருமுதலாளிகளுக்காகச் செயல்பட்டு வருவதாக விமர்சித்து வரும் ராகுல் காந்தி, உண்மை தன்னை அழகாக வெளிக்கொண்டு வந்துள்ளது எனக் கூறியுள்ளார்.

 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், உண்மை தன்னை எவ்வளவு அழகாக வெளிகொண்டு வந்துள்ளது. நரேந்திர மோடி மைதானம். ரிலையன்ஸ் முனை (RELIANCE END), அதானி எண்ட் (ADANI END), ஜெய்ஷா தலைமை வகிக்கிறார். #HumDoHumareDo (நாம் இருவர், நமக்கு இருவர்)" எனத் தெரிவித்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்