நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் 52 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் கட்சி வென்றது. தேர்தலில் ஏற்பட்ட இந்த தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி கடந்த மாதம் 25-ம் தேதி நடந்த கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

rahul gandhi interview about congress leadership

Advertisment

Advertisment

அவரது ராஜினாமாவை கட்சி தலைமை ஏற்கவில்லை. இருப்பினும் தன்னுடைய நிலைப்பாட்டில் விடாப்பிடியாக இருந்து வருகிறார் ராகுல் காந்தி. விரைவில் கூடவுள்ள காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் இவ்விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்படுகிறது.

இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "காங்கிரஸ் கட்சியின் தலைவரை கட்சியின் தலைமைதான் முடிவு செய்யும். தலைவரைத் தேர்வு செய்யும் விஷயத்தில் என்னுடைய தலையீடு இருக்காது. தலைவரை தேர்வு செய்வது வெளிப்படையாகவே நடக்கிறது" எனக் கூறினார்.