2019 மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை ராகுல்காந்தி டெல்லியில் வெளியிட்டார்.
நீட் தேர்வு ரத்து முதல் வேலைவாய்ப்பின்மை வரை பல திட்டங்களை உள்ளடிக்கிய அந்த அறிக்கையை வெளியிட்ட அவர், அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய போது வயநாடு தொகுதியில் அவர் போட்டியிடுவதற்கான காரணம் குறித்து கூறினார். அவர் கூறியதாவது: தென்னிந்திய மக்கள் மோடியால் தனித்துவிடப்பட்டதாக உணர்கிறேன்; அவர்களுடன் துணையாக நான் இருக்கிறேன் என்பதை உணர்த்தவே கேரளாவில் போட்டிஇடுகிறேன் என கூறினார்.