/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a72066.jpg)
பொய் விளம்பரங்களை வெளியிட்டதாகக்கூறி பாஜக தொடர்ந்த வழக்கில் பெங்களூரு நீதிமன்றத்தில் தற்போது, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி நேரில் ஆஜராகி உள்ளார்.
கடந்தாண்டு கர்நாடகாவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியமைத்து வருகிறது. அத்தேர்தலின் பரப்புரை நேரத்தில் பாஜக அரசு பொதுப்பணித்துறையில் 40 சதவீதம் கமிஷன் பெறுவதாக காங்கிரஸ் விமர்சித்தது. கடந்த 8/5/2023 அன்று ஊடகம் மற்றும் நாளிதழ்களில் காங்கிரஸ் இது தொடர்பாக பிரம்மாண்ட விளம்பரங்களை கொடுத்திருந்தது. இதனையடுத்து பாஜக குறித்து பொய் விளம்பரங்களை வெளியிட்டதாகப் பெங்களூரில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 11/3/2024 அன்று காங்கிரஸ் மீது பாஜக வழக்கு தொடர்ந்தது.
முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார், காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நடந்து வரும் நிலையில் கடந்த ஒன்றாம் தேதி குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம்உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த ஒன்றாம் தேதி கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆஜராகி இருந்தனர். அவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. ராகுல்காந்தி ஆஜராகாத நிலை இருந்தது. எனவே அடுத்த விசாரணையில் ராகுல் காந்தி கட்டாயமாக ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது இன்று வழக்கு விசாரணையில் ராகுல் காந்தி நேரில் ஆஜராகி உள்ளார். இந்த வழக்கில் ராகுல் காந்திக்கும் ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)