/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Rahul gandhi.jpg)
தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் வருகின்ற டிசம்பர் 7ஆம் தேதி நடைபெறுகிறது. 119 தொகுதிகளில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. ஏற்கனவே ஆட்சியில் இருந்த டி.ஆர்.எஸ் கட்சி ஆட்சியை தக்க வைக்க போராடி வருகிறது. அவர்களை எதிர்த்து ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கட்சி தெலுங்கு தேசம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிடுகிறது. இதேபோல பாஜகவும் களத்தில் உள்ளது.
தொண்டர்களின் விருப்பத்தின் பேரில் தெலுங்கானாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி வருகிற 22 மற்றும் 23ஆம் தேதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். இந்த தேர்தலில் போட்டியிடவுள்ள 65 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி சமீபத்தில் வெளியிட்டது. நேற்று 2வது கட்டமாக இன்று 10 வேட்பாளர்கள் பெயர்களை கொண்ட பட்டியலை வெளியிட்டது. தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், தெலுங்கானா மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக ஜெட்டி குசும் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/18057647_719886548191985_4542912737982370865_n.jpg)