Skip to main content

”அச்சத்தால் மோடி இரவு தூங்கமுடியாமல் தவிக்கிறார்”- ரஃபேல் விவகாரம் குறித்து ராகுல் காந்தி

Published on 02/11/2018 | Edited on 02/11/2018
rahul gandhi


ரஃபேல் போர் விமானம் வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ் புகார் அளித்து வருகிறது. ஃப்ரான்ஸ் டஸால்ட் நிறுவனத்துடன் 36 போர் விமானங்களை வாங்க தற்போதைய மத்திய அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்த 36 போர் விமானங்களையும் முந்தைய காங்கிரஸ் அரசு நிர்ணயித்த விலையைக்காட்டிலும் பல மடங்கு விலையை அதிகமாக பாஜக அரசு வழங்க உள்ளது. மத்திய அரசின் ஹெச்ஏஎல் நிறுவனத்திற்கு வழங்க இருந்த ஒப்பந்தத்தை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு மத்திய அரசு வழங்கியுள்ளது என்று புகார்களை அடிக்கொண்டே போகிறது காங்கிரஸ். 
 

இந்த முறைகேடு புகார் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியது: ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மோடி ஊழல் செய்துள்ளதற்கு உரிய ஆதாரங்கள் உள்ளன. டஸால்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, நிலத்துக்காக அந்த தொகை தரப்பட்டதாக கூறியுள்ளார். ஆனால், டஸால்ட் வழங்கிய லஞ்சமாக அளித்த 284 கோடியை வைத்துதான் ரிலையன்ஸ் நிறுவனம் நிலத்தை வாங்கியுள்ளது தெரியவருகிறது.  நஷ்டத்தில் இயங்கும் நிறுவனத்திற்கு டஸால்ட் நிறுவனம் 284 கோடி தரவேண்டிய அவசியம் என்ன? எனவே டஸால்ட் நிறுவன அதிகாரி பொய் சொல்கிறார். இந்த ஒப்பந்தமே பிரதமர் மோடிக்கும் அனில் அம்பானிக்கும் செய்யப்பட்டுள்ளது. பிரதமே நேரடியாக இந்த ஒப்பந்தத்தை செய்துள்ளார். நாடாளுன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட்டால் முழு உண்மையும் வெளியே வரும். இந்த விவகாரம் தெரிந்ததால் தான் சிபிஐ இயக்குனர் நீக்கப்பட்டார். ரபேல் விவகாரத்தில் விசாரணை நடைபெறுமோ என்ற அச்சத்தில் இரவு முழுவதும் தூங்காமல் பிரதமர் மோடி தவித்து வருகிறார். 

சார்ந்த செய்திகள்