Skip to main content

”நான் என்ன சொல்கிறேனோ அதைதான் செய்வேன்...”- ராகுல் காந்தி

Published on 27/11/2018 | Edited on 27/11/2018

 

ராஜஸ்தானில் வருகின்ற டிசம்பர் 7ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி ராஜஸ்தானிலுள்ள பொக்ரானில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசுகையில், ”மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி அமைத்தால் 10 நாட்களில் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். பஞ்சாப் மற்றும் கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் இதே வாக்குறுதியைதான் அளித்தது. அந்த மாநில விவசாயிகளிடம் கேட்டுப்பாருங்கள். அவர்களின் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நான் என்ன சொல்கிறேனோ அதைதான் செய்வேன். நான் பொய்யான வாக்குறுதியை வழங்க மாட்டேன்” என்றார்.
 

இந்த பிரச்சாரத்தில் கலந்துகொள்வதற்கு முன்பாக அஜ்மீரில் உள்ள இஸ்லாமிய மதத்தை சேர்ந்த சூபி ஞானி காஜா மெய்னுதீன் சிஸ்தி தர்காவிற்கு ராகுல் காந்தி சென்று பிரார்த்தனை செய்தார். மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட், முன்னாள் முதல்வர் அசோக் கேக்லட் ஆகியோர் அப்போது உடன் இருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்