Skip to main content

வானொலியில் பிரபலமான சரோஜ் நாராயண ஸ்வாமி காலமானார்!

Published on 13/08/2022 | Edited on 13/08/2022

 

Radio legend Saroj Narayana Swamy all India radio


வானொலியில் ஒரு காலத்தில் அதிகாலையில் ஒலித்த செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண ஸ்வாமி என்ற தனித்துவமான குரலுக்கு சொந்தக்காரர் மும்பையில் காலமானார். அவருக்கு வயது 87.

 

லட்சக்கணக்கான தமிழர்கள் நாள்தோறும் வானொலியில் சரோஜ் நாராயண் ஸ்வாமியின் குரலைக் கேட்டு எழும் காலம் இருந்தது. அகில இந்திய வானொலி வாயிலாக பிரபலமான அவருக்கு ஒலிபரப்புத்துறையில் ஆற்றிய பங்களிப்பிற்காக, கடந்த 2019- ஆம் ஆண்டில் தமிழக அரசு 'கலைமாமணி விருது' வழங்கி பெருமைப்படுத்தியது. 

 

அகில இந்திய வானொலியில் தமிழ் செய்தி வாசிப்பாளராகப் பிரபலமான சரோஜ் நாராயண் ஸ்வாமி ஒலிபரப்புத்துறையின் பெண்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தார். 35 ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றி விடைபெற்ற பின்னர், தமிழ் படங்கள், திரைப்படங்கள் பிரிவின் ஆவணப்படங்கள் உள்ளிட்டவற்றிற்கு அவர், குரல் கொடுத்து வந்தார். 

 

அதிகமாக அறியப்பட்டு, அழியா புகழ் பெற்ற சரோஜ் நாராயண் ஸ்வாமியின் மறைவு வானொலி நேயர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"வாசலில் களமிறங்குவோம்" - வைரமுத்து கண்டனம்

Published on 26/07/2023 | Edited on 26/07/2023

 

vairamuthu about radio issue

 

சென்னை வானொலி நிலையத்தின் முதன்மை அலைவரிசையான சென்னை ஏ மத்திய அலைவரிசை, பண்பலை வரிசையான ரெயின்போ ஆகியவற்றின் சேவைகள் ஒன்றிணைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. அதன்படி அலைவரிசைகளின் நிகழ்ச்சிகள் முறையே 50% குறைக்கப்பட்டுள்ளன. 

 

சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவின் அதிகாரப்பூர்வ வானொலியாக உள்ள அகில இந்திய வானொலி (All India Radio) யின் பெயரை இனிமேல் 'ஆகாஷ்வாணி' என்று மட்டுமே பயன்படுத்த வேண்டும் என வானொலியை நிர்வகிக்கும் பிரசார் பாரதி அமைப்பின் தலைமை இயக்குநர் உத்தரவிட்டிருந்தார். எல்லா மொழிகளிலும் இதே பாணியையே பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். அதன்படி இரு வானொலிச் சேவைகளும் இணைக்கப்பட்டு ஆகாசவாணி ஒருங்கிணைந்த சேவை என்ற பெயரில் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுகின்றன. இது அப்பட்டமான இந்தித் திணிப்பாகும் என அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். 

 

இந்நிலையில் பாடலாசிரியர் வைரமுத்து இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "அகில இந்திய வானொலியின் தமிழ் நிலையங்கள் பல கலைஞர்கள் தமிழ் விளைத்த கழனிகளாகும்; கலைக்கும் அறிவுக்குமான ஒலி நூலகங்களாகும். அங்கே தமிழ் மொழி நிகழ்ச்சிகள் குறைந்து இந்தி ஆதிக்கம் தலைதூக்குவது, மீன்கள் துள்ளிய குளத்தில் பாம்பு தலை தூக்குவது போன்றதாகும். கண்டிக்கிறோம். இந்தி அகலாவிடில் அல்லது குறையாவிடில், தமிழ் உணர்வாளர்கள் வானொலி வாசலில் களமிறங்குவோம்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

 

 

Next Story

'இந்த முடிவை உடனே கைவிட வேண்டும்; தரத்தை கூட்ட வேண்டும்'-அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

Published on 02/07/2023 | Edited on 02/07/2023

 

 Radio frequency should not be covered; Quality must be increased - Anbumani Ramdas insists

 

அனைத்திந்திய வானொலியின் கொல்கத்தா வானொலியில் முதன்மை அலைவரிசை  ஜூன் 30-ஆம் நாள் நள்ளிரவுடன் மூடப்பட்டிருக்கிறது. கொல்கத்தா முதன்மை அலைவரிசையில் இதுவரை ஒலிபரப்பட்டு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரெயின்போ பண்பலை வரிசையில் ஒலிபரப்பப்படும் என்றும், ரெயின்போ பண்பலைவரிசை இனி செயல்படாது என்றும், அதில் மணிக்கு ஒரு முறை ஒலிபரப்பப்பட்டு வந்த செய்திகள் இனி ஒலிபரப்பாகாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அலைவரிசையை மூடக்கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இந்த மாற்றங்கள் மேற்கு வங்க வானொலி நேயர்களிடம் பெரும் ஏமாற்றத்தை  ஏற்படுத்தி உள்ளன. இதைவிட அதிர்ச்சியளிக்கும் செய்தி என்னவென்றால், சென்னை வானொலி நிலையத்தின் முதன்மை அலைவரிசை சேவை எந்த நேரமும்  நிறுத்தப்படக்கூடும்; அதில் ஒலிபரப்பான நிகழ்ச்சிகள் ரெயின்போ பண்பலையில் ஒலிபரப்படும்; பண்பலை நிகழ்ச்சிகள் இனி ஒலிபரப்பாகாது என்பது தான்.

 

சென்னை-ஏ என்றழைக்கப்படும் சென்னை வானொலியின் முதன்மை அலைவரிசை  ஒலிபரப்பு நிறுத்தப்பட்டால், அது சென்னை வானொலி நிலைய நேயர்களுக்கு பேரிழப்பாக அமைந்து விடும். தனித்துவமான அதன் நிகழ்ச்சிகளைக் கேட்பதற்காக லட்சக்கணக்கான நேயர்கள் உள்ளனர். தமிழ்ப் பண்பாடு, கலைகள் ஆகியவற்றின் தூதராகவும் இந்த அலைவரிசை திகழ்கிறது.  இதுவரை 300 கி.மீ சுற்றளவில் கேட்கப்பட்டு வந்த இந்த நிகழ்ச்சிகளை ரெயின்போ பண்பலையில் ஒலிபரப்பும் போது, அதிகபட்சமாக 50 கி.மீ சுற்றளவில் உள்ளவர்கள் மட்டும் தான் கேட்க முடியும். இதனால் சென்னை வானொலியின் முதன்மை அலைவரிசை எந்த நோக்கத்திற்காக தொடங்கப்பட்டதோ, அந்த நோக்கமே சிதைந்து விடும்.

 

சென்னை வானொலியில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு வரை சென்னை-ஏ, சென்னை-பி, விவிதபாரதி வர்த்தக ஒலிபரப்பு, தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான சிற்றலை ஒலிபரப்பு, ரெயின்போ பண்பலை, கோல்டு பண்பலை ஆகிய 6 அலைவரிசைகள் ஒலிபரப்பாகி வந்தன. இவற்றில் சிற்றலை ஒலிபரப்பும்,   சென்னை-பி அலைவரிசையும் கடந்த இரு ஆண்டுகளில் மூடப்பட்டு விட்டன. சென்னை-ஏ அலைவரிசை கடந்த ஆண்டு ஜனவரி 31-ஆம் நாளுடன் மூடப்படவிருந்தது.  ஆனால்,  அப்போதே அதற்கு நான் எதிர்ப்பு  தெரிவித்ததால் அத்திட்டம் கைவிடப்பட்டது.  இப்போது  சென்னை ஏ அலைவரிசையை மூட மீண்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிகிறது.  அவ்வாறு மூடப்பட்டால் நேயர்களுக்கு தரமான நிகழ்ச்சிகள் கிடைக்காது என்பது ஒருபுறமிருக்க,  நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள், அறிவிப்பாளர்கள், பொறியாளர்கள் என ஏராளமானோர் வேலையிழப்பார்கள். அது தவிர்க்கப்பட வேண்டும்.

 

பிரசார்பாரதியின் செலவுகளைக் குறைப்பதற்காகவே இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தெரிகிறது. பிரசார்பாரதியின் தலைமைப் பொறுப்பில் வானொலி, தொலைக்காட்சி குறித்த அனுபவம் இல்லாத  இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் நியமிக்கப்படுவது தான் இந்த நிலைக்கு காரணம் ஆகும்.  வருவாயை அதிகரிப்பதன் மூலமாக மட்டுமே எந்த நிறுவனத்தையும் இலாபத்தில் இயக்க முடியுமே தவிர, செலவுகளை குறைப்பதால் அல்ல என்பதை பிரசார்பாரதி நிர்வாகம் உணரவேண்டும்.  நிகழ்ச்சிகளின் தரம் மற்றும் சுவையை மேம்படுத்தி வானொலிகளின் வருவாயை அதிகரிக்கச் செய்ய வேண்டும். சென்னை - ஏ அலைவரிசை உள்ளிட்ட  அகில இந்திய வானொலியின் எந்த அலைவரிசையையும்  மூடும் திட்டத்தை கைவிட வேண்டும்' என தெரிவித்துள்ளார்.