Skip to main content

தேசிய பாதுகாப்பு ஆலோசகரை சந்தித்த கேப்டன் அமரீந்தர் சிங்!

Published on 30/09/2021 | Edited on 30/09/2021

 

amarinder singh

 

பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அம்மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல் தொடர்ந்துவருகிறது. அண்மையில் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும், அமரீந்தர் சிங்கிற்கும் இடையே நடைபெற்று வந்த மோதலை நிறுத்த, சித்து பஞ்சாப் மாநில காங்கிரஸின் தலைவராக்கப்பட்டார்.

 

இருப்பினும் கோஷ்டி பூசல் தீரவில்லை. காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களில் ஒரு தரப்பினர் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்கிற்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினர். இதனையடுத்து கேப்டன் அமரீந்தர் சிங், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து காங்கிரஸ் மத்திய தலைமை, சரண்ஜித் சிங் சன்னியை முதல்வராக நியமித்தது. இதனையடுத்து சரண்ஜித் சிங் சன்னி இரண்டு துணை முதல்வர்களோடு பதவியேற்றுக்கொண்டார். அதனைத்தொடர்ந்து பஞ்சாபின் புதிய அமைச்சரவை பதவியேற்றுக்கொண்டது.

 

இதனையடுத்து திடீர் திருப்பமாக  நவ்ஜோத் சிங் சித்து, தனது பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். பஞ்சாப் அமைச்சரவையில் சிலர் சேர்க்கப்பட்டது குறித்து சித்து அதிருப்தி அடைந்ததாகவும், அதனால் அவர் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்ததாக தகவல் வெளியானது.

 

இதற்கிடையே முதல்வர் பதவியை ராஜினாமா செய்த கேப்டன் அமரீந்தர் சிங், பாஜக தேசிய தலைவர் நட்டாவையும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்திக்கவுள்ளதாகவும், இதனால் அவர் பாஜகவில் இணைவது குறித்து ஆலோசிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்தச் சூழலில் நேற்று (29.09.2021) கேப்டன் அமரீந்தர் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்தார்.

 

இது பஞ்சாப் மாநில அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அமித்ஷாவுடனான இந்தச் சந்திப்பின்போது வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியதாக கேப்டன் அமரீந்தர் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். இந்தநிலையில் கேப்டன் அமரீந்தர் சிங் இன்று, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்தார். இந்த சந்திப்பிற்கான காரணம் குறித்து தகவல்கள் வெளிவராத நிலையில், கேப்டன் அமரீந்தர் சிங் இன்று பிரதமர் மோடியையும் சந்திக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நெருங்கும் நாடாளுமன்றத் தேர்தல்; டெல்லியில் பா.ஜ.க. முக்கிய ஆலோசனை!

Published on 29/02/2024 | Edited on 29/02/2024
Parliamentary elections approaching; BJP in Delhi Important advice

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

இந்நிலையில் டெல்லியில் உள்ள பா.ஜ.க. தேசியத் தலைமையகத்தில் பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க.வின் மத்திய தேர்தல் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி 400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவது குறித்தும், வேட்பாளர்கள் தேர்வு, கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கூட்டத்தில் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா, மத்திய அமைச்சர் அமித்ஷா, மத்திய பாதுகாப்பு அமைச்சரும் பா.ஜ.க. மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங், மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ், சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சா, ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே மற்றும் பா.ஜ.க ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தை தொடர்ந்து பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

“பாஜகவுக்கான கூட்டணிக் கதவுகள் சாத்தப்பட்டு விட்டன” - அமித்ஷாவுக்கு ஜெயக்குமார் பதிலடி

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
Alliance doors for BJP are closed Jayakumar response to Amit Shah

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அதிமுக சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரச்சாரக் குழு, தேர்தல் விளம்பரக் குழுக்கள் அமைக்கப்பட்டன. அதே சமயம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்களான பொன்னையன், ஜெயக்குமார், கே.பி. முனுசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என திட்டவட்டமாக கூறி வருகின்றனர்.

அந்த வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், ‘பாஜகவுடன் அதிமுகவுக்கு ஒட்டுமில்லை, உறவும் இல்லை. பாஜக என்பது கழட்டிவிடப்பட்ட பெட்டி அதனை மீண்டும் இணைத்துக் கொள்ள மாட்டோம். பாஜக கடந்த 10 ஆண்டுகளில் எந்தெந்த மாநிலங்களுக்கு துரோகம் செய்தது என்பதை தேர்தலின் போது அம்பலப்படுத்துவோம்” எனத் தெரிவித்திருந்தார்.

இத்தகைய சூழலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பான கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், ‘அதிமுக கூட்டணிக்காக பாஜக கதவுகள் திறந்தே உள்ளன. தமிழ்நாட்டில் யாருடன் கூட்டணி என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்’ எனத் தெரிவித்திருந்தார்.

Alliance doors for BJP are closed Jayakumar response to Amit Shah

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அமித்ஷா கூறிய கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய ஜெயக்குமார், “பாஜகவுக்கு அதிமுக கூட்டணிக்கான கதவுகள் சாத்தப்பட்டு விட்டன. பாஜக வேண்டுமானால் கூட்டணிக்கான கதவுகளை திறந்து வைத்திருக்கலாம். முன்வைத்த காலை எப்போது பின் வைக்க மாட்டோம்” எனத் தெரிவித்துள்ளார். மேலும் அதிமுக கூட்டணியில் பாஜகவையும் கொண்டு வருவது குறித்தும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் பேசி வருவதும் குறிப்பிடத்தக்கது.