சாவர்க்கர் குறித்து பேச்சுக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என ராகுல் காந்திக்கு புனே நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடந்தாண்டு இங்கிலாந்து சென்ற பொழுது கலந்து உரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அங்கு சாவர்க்கர் குறித்து அவதூறாகப் பேசியதாக சார்வக்கரின் உறவினர் சத்யாகி சாவர்க்கர் சார்பில் புனே உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு வரும் அக்.23 ஆம் தேதி நேரில் ஆஜராகி நேரில் தன்னுடைய பேச்சுக்கு விளக்கம் அளிக்கும்படி சம்மன் அனுப்பி உத்தரவிட்டுள்ளார்.
இது முதல் முறை அல்ல ஏற்கனவே ராகுல் காந்திக்கு கடந்த 2022 நவம்பர் மாதம் சார்வக்கர் குறித்து அவதூறாகப் பேசியதாக தனியார் தொண்டு நிறுவனம் கொடுத்த புகாரில் ராகுல் காந்திக்கு நாசிக் நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தகுந்தது.