Published on 09/12/2020 | Edited on 09/12/2020

ஜம்மு- காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில், பாதுகாப்புப் படையினர், டிசம்பர் 9-ஆம் தேதியன்று நடந்த மோதலில், இரண்டு தீவிரவாதிகளைச் சுட்டுக்கொன்றனர். இந்த மோதலில் பொதுமக்கள் சிலருக்கும் காயங்கள் ஏற்பட்டது.
புல்வாமா மாவட்டத்தின் திக்கன் பகுதியில் தீவிரவாதிகள் இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில், பாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகளைத் தேடிச்சென்று, சுற்றிவளைக்க முயன்றபோது இம்மோதல் நடைபெற்றது. இரு தரப்புக்கும் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.