puducherry president rule impose pm narendra cabinet discussion

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் காணொளி காட்சி மூலம் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில், புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த அம்மாநில துணைநிலை ஆளுநரின் பரிந்துரை கடிதம் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் தொடர்பாகவும், நாட்டில் நிலவும் பல்வேறு விவகாரங்கள் குறித்தும் அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன.மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் இன்று (24/02/2021) பிற்பகலில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, குஜராத் மாநிலம்அகமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளதால், அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. இருப்பினும், அவருடைய ஒப்புதலுடனே கூட்டம் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. அதேபோல், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக குஜராத் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment