Skip to main content

"முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்" - சுகாதாரத்துறை இயக்குநர்

 

puducherry health secretary talks about viral fever 

 

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக வைரஸ் காய்ச்சல் பரவி வருவதால் அனைத்து அரசு பொது மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் அதிக அளவு குவிந்து வருகின்றனர்.

 

இதனிடையே சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் பேரவையில் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் புதுச்சேரியில் வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வருவதால் அதை கட்டுப்படுத்தும் விதமாக 16ஆம் தேதி முதல் வரும் 26 ஆம் தேதி வரை புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆரம்ப வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

 

இது குறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "புதுச்சேரியில் H3N2 இன்புளுயன்சா காய்ச்சல் காரணமாக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் 6 குழந்தைகள் உள்ளிட்ட 12 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்கள். குழந்தைகள் மூலம் இந்த தொற்று நோய் பரவும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை. பொது இடங்களுக்கு செல்வோர் முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்"  எனத் தெரிவித்துள்ளார். 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !