Published on 21/11/2019 | Edited on 21/11/2019
புதுச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி சங்கு ஊதி மலர் வளையம் வைத்து ஆர்ப்பாட்டம்.
புதுச்சேரி வில்லியனூரிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உட்பட புதுச்சேரியில் அனைத்து மருத்துவமனைகளிலும் உயிர்காக்கும் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் இல்லை என்றும், கிராம புறங்களில் அவசர சிகிச்சை அளிக்க போதுமான மருத்துவர்கள் இல்லை என்றும் பொதுமக்களும், சமுக ஆர்வலர்களும் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர்.
![puducherry govt hospital not get facilities, peoples political parties strike](http://image.nakkheeran.in/cdn/farfuture/pkta7iAof06dH6ZV3aaGSWVFSSKA4R_0qpkBWDgUX68/1574304321/sites/default/files/inline-images/puducherry3.jpg)
இதனை கண்டித்து கிராம்ப்புற மக்கள் பாதுகாப்பு இயக்கம் தலைமையில் மக்கள் வாழ்வுரிமை இயக்கம், மக்கள் உரிமை கூட்டமைப்பு, தமிழர் களம், தமிழக வாழ்வுரிமை கட்சி உட்பட அனைத்து பொதுநல அமைப்புகளும் ஒன்றிணைந்து வில்லியனூர் ஆரம்ப சுகாதார நிலைத்துக்கு சங்கு ஊதி மலர் வளையம் வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.