
புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் ஆய்வுக்குழு கூட்டத்தில் நிர்வாகிகள் இடையே வாக்குவாதம் மற்றும் ரகளை ஏற்பட்டதால் பரபரப்பு நிலவி உள்ளது.
புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் வேட்பாளர்கள் ஆய்வுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. வேட்பாளர்கள் ஆய்வுக்குழு தலைவர் திக்விஜய் சிங் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி மற்றும் திக்விஜய் சிங் உள்ளிட்டோர் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ரகளை செய்தனர். கூட்டணியில் உள்ள திமுகவிற்கு அதிக இடங்களை ஒதுக்கீடு செய்ததாக கூறி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ரகளையில் ஈடுபட்டனர்.
கூட்டத்திற்கு வந்த ஏராளமான தொண்டர்கள் கட்சி அலுவலத்தின் உள்ளே சென்று ரகளையில் ஈடுபட்டதால் அவர்களை முன்னாள் முதல்வர் நாராயணசாமி சமாதானப்படுத்த முயன்றார். இருந்தும் கூட தடுக்க முடியாத அளவிற்கு ரகளை என்பது அதிகமானது. இதனால் அங்கு போலீசார் மற்றும் துணை இராணுவப் படையினர் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். தொடர்ந்து சமாதான பேச்சுவார்த்தை ஈடுபட்டாலும் ரகளை என்பது தொடர்ந்து நடந்து வருகிறது.