Published on 26/03/2023 | Edited on 27/03/2023
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி நிலையத்தில் இருந்து பிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் 36 செயற்கைகோள்களுடன் இன்று விண்ணில் பாய்ந்தது.
2022-ல் ஒன் வெப் நிறுவனத்துடன் இஸ்ரோ மேற்கொண்ட ஒப்பந்தத்தின்படி 36 செயற்கைக்கோள்கள் இன்று ஏவப்பட்டது. மொத்தம் 5,805 கிலோ மொத்த எடை கொண்ட செயற்கைக்கோள்களை ராக்கெட் சுமந்து செல்கிறது. 450 கிலோமீட்டர் தொலைவில் 87.4 டிகிரியில் புவி சுற்று வட்டப் பாதையில் செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தும் பணி துவங்கியுள்ளது.
திட்டமிட்டபடி ராக்கெட் பயணிப்பதாகவும், கிரையோஜெனிக் எஞ்சின் வெற்றிகரமாக பிரிந்ததாகவும், தற்பொழுது செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தும் பணி தொடங்கி உள்ளதாகவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.