Proud of people like Nehru, vajpayee, Manmohan Singh says PM Modi

நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் இன்று முதல் வரும் 22 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரின் முதல் நாள் நிகழ்வுகள் வழக்கம்போல் பழைய நாடாளுமன்ற கட்டிடத்திலும் நாளை(18.9.2022) முதல் 22 ஆம் தேதி வரை புதிய நாடாளுமன்ற கட்டிடத்திலும் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் நிர்ணய சபை தொடங்கப்பட்டது முதல் நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுக்கால பயணம் வரை இந்த கூட்டத்தொடரில் விவாதிக்கப்படும் என்று நாடாளுமன்ற செய்தி இதழியில் விளக்கமளித்துள்ளது.

Advertisment

இந்த நிலையில் பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் இன்று முதல்நாள் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளை புதிய நாடாளுமன்றத்தில் கூட்டத்தொடர் கூடவுள்ளதால், பழைய நாடாளுமன்றம் குறித்து பிரதமர் மோடி உரை நிகழ்த்தி வருகிறார். அதில், இந்தியா முழுவதும் மாற்றத்திற்கான அலை உருவாகியுள்ளது. இந்தியாவின் தலைமைத்துவம் குறித்து எழுப்பப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் ஜி 20 மாநாடு விடையளித்துள்ளது. ஜி20 மாநாட்டால் இந்தியா குறித்த எதிர்மறை எண்ணம் மாற்றப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்பி மிக்க இந்த நாடாளுமன்றத்திற்கு நாம் அனைவரும் விடை கொடுக்கும் நேரம் இது. இந்தியர்களின் பணத்தாலும், வியர்வையாலும் இந்த நாடாளுமன்றம் கட்டப்பட்டது.

Advertisment

முதன் முறையாக நாடாளுமன்றத்திற்குள் நுழையும் போது விழுந்து வணங்கிய பிறகே உள்ளே வந்தேன். நாட்டின்பன்முகத்தன்மையைபறைசாற்றும்நாடாளுமன்றம். அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய இடமாக நாடாளுமன்றம் இருக்கும். அதிகளவிலான பெண்எம்.பிக்களின்பங்களிப்பு இந்தநாடாளுமன்றத்திற்குப்பெருமை சேர்த்துள்ளது. அனைத்து சமூக அமைப்புகளில் உள்ளவர்களுக்கு நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ளனர்.கொரோனாகாலத்தில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் பாதிக்காமல் பார்த்துக்கொண்டோம். நம்மை வழிநடத்தியவர்களுக்கு நாம் தலைவணங்கும் ஒரு அரிய வாய்ப்பு நமக்குகிடைத்திருக்கிறது.

கடந்த 75 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தின்மீது அசைக்க முடியாத அளவிற்கு மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.உணர்வுப்பூர்வமானபல நிகழ்வுகளுக்கு இந்த நாடாளுமன்ற சாட்சியாக இருந்துள்ளது. நேரு,வாஜ்பாய்மன்மோகன்சிங், போன்ற பிரதமர்கள்நாடாளுமன்றத்திற்குப்பெருமை சேர்த்துள்ளனர். இந்த நாடாளுமன்றத்தில் பணியாற்றும் ஒவ்வொரு ஊழியர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். நாடாளுமன்றத்தைக் காக்கஉயிர்த்தியாகம்செய்த ஒவ்வொரு வீரருக்கும் நான் தலைவணங்குகிறேன். நாடாளுமன்றத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல். இதனை ஒவ்வொரு இந்தியரும் மறக்க மாட்டார்கள். நாடாளுமன்றம் மீதான மக்களின்நம்பிக்கைதொடர்ந்து உயர்ந்து வருகிறது. நாடாளுமன்றம் மீதான மக்களின்நம்பிக்கைதொடர்ந்து உயர்ந்து வருகிறது. அது அப்படியே தொடர வேண்டும் என்பது எனது விருப்பம்”என்றார்.