கேரளா மாநிலத்தின் பா.ஜ.க தலைவராக பொறுப்பு வகித்து வருபவர் கே.சுரேந்திரன். இவர் மாநிலம் முழுவதும், ‘கேரள பாதயாத்திரை’ என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், மாநிலம் தழுவிய இந்த நடைபயணத்திற்காக கேரளா பா.ஜ.க சார்பில் ஒரு பிரச்சார பாடல் வெளியிடப்பட்டது.
அந்த பாடலில், ஊழல் நிறைந்த மத்திய அரசுக்கு எதிராக போராட வருமாறு மக்களுக்கு அழைக்கு விடுக்கும் வகையில் வரிகள் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த பாடலை, கேரள பா.ஜ.கவின் அதிகாரப்பூர்வ யூ-டியூப் பக்கத்தில் பகிரப்பட்டது. மத்திய அரசை விமர்சிக்கும் வகையில் இடம்பெறும் இந்த பாடலை கேரள பா.ஜ.க வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, அந்த பாடல் அக்கட்சியின் அதிகாரப்பூர்வ யூ-டியூப் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டது. ஆனால், அதற்குள் அந்த பாடல் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.