Priyanka on Rahul Gandhi

இந்தியா மட்டுமல்ல உலகமே எதிர்பார்க்கப்பட்ட மக்களவைத் தேர்தலின் முடிவுகள் நேற்று (04-06-24) வெளியானது. அதில், மொத்தம் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க வெறும் 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தாலும், கூட்டணி கட்சிகளில் தயவால் பா.ஜ.க கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சியைப்பிடிக்கவுள்ளது.

Advertisment

இந்த நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது சகோதரர் ராகுல் காந்தி குறித்து எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சிகரமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “அவர்கள் உங்களுக்கு என்ன சொன்னாலும், என்ன செய்தாலும் நீங்கள் ஒருபோதும் பின்வாங்காமல் நின்றுகொண்டே இருந்தீர்கள். எவ்வளவு பிரச்சனை வந்தாலும் நீங்கள் பின்வாங்கவில்லை. அவர்கள் உங்கள் நம்பிக்கையை அவர்கள் எவ்வளவு சந்தேகித்தாலும் நீங்கள் நம்பிக்கையை நிறுத்தவில்லை.

Advertisment

அவர்கள் பரப்பிய பரப்புரைகளில்பெரும் பொய்கள் இருந்தபோதிலும் நீங்கள் சத்தியத்திற்காக போராடுவதை நிறுத்தவில்லை. அவர்கள் ஒவ்வொரு நாளும் அதை உங்களுக்கு வெறுப்பைப் பரிசளித்தாலும் கூட, கோபத்தையும் வெறுப்பையும் உங்களை வெல்ல நீங்கள் அனுமதிக்கவில்லை. நீங்கள் உங்கள் இதயத்தில் அன்பு, உண்மை மற்றும் கருணையுடன் போராடினீர்கள். உங்களை இதுவரை பார்க்க முடியாதவர்கள், இப்போது உங்களைப் பார்க்கிறார்கள். எங்களில் சிலர் எப்பொழுதும் உங்களைப் பார்த்திருக்கிறோம், நீங்கள் எல்லோரையும் விட தைரியசாலி என்று அறிந்திருக்கிறோம். ராகுல் காந்தி, நான் உங்கள் சகோதரி என்பதில் பெருமை கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Advertisment