Published on 17/07/2024 | Edited on 17/07/2024

ராஜஸ்தான் மாநிலம் கோட்ட பகுதியில் கடந்த 2014 ஆம் ஆண்டு 7 வயது சிறுவன் கடத்தி கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். அதன்பின் இந்தக் கொலையில் சம்பந்தப்பட்ட அங்குர் படியா(43) என்ற நபரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதில் அவருக்கு மரண தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக அங்குர் படியா ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில் அவரது மரண தண்டனையை ஆயுள் தண்டையாக ராஸ்தான் உயர்நீதிமன்றம் குறைத்துத் தீர்ப்பளித்தது. அதன் பின்னர் அங்குர் படியா பைகானேர் சிறையில் அடைக்கப்பட்டு பின்பு, சங்கானேர் திறந்தவெளி சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார்.
வாசகர்கள் சாய்ஸ்: தொடங்கிய இடத்திலேயே 'பிக்பாக்கெட்'; சசிகலா கூட்டத்தில் அதிர்ச்சி