அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இந்திய வம்சாவளியினரைச் சந்தித்துப் பேசினார்.

Advertisment

மூன்று அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு வாஷிங்டன் விமானப்படைத் தளத்தில், கொட்டும் மழையிலும் இந்திய வம்சாவளியினர் கோஷமிட்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். அமெரிக்காவின் உயர் அதிகாரிகள் மற்றும் அமெரிக்காவுக்கான இந்தியத்தூதர் உள்ளிட்டோரும் வரவேற்றனர். அப்போது, இந்திய வம்சாவளியினரைப் பிரதமர் சந்தித்துப் பேசினார். இது குறித்த புகைப்படங்களை அவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அத்துடன், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இந்தியாவின் பலம் என்று குறிப்பிட்டார்.

Advertisment

அதைத் தொடர்ந்து, பன்னாட்டு நிறுவனங்களின் அதிகாரிகளைப் பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்துப் பேசினார். இதையடுத்து, ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசனையும் பிரதமர் சந்தித்துப் பேசவுள்ளார். அதைத் தொடர்ந்து, இந்திய வம்சாவளியும், அமெரிக்காவின் துணை அதிபருமான கமலா ஹாரிஸையும் சந்தித்துப் பேசவுள்ளார்.

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நான்கு நாடுகளின் கூட்டமைப்பான 'குவாட்' கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார். இதில் பிரதமர், அமெரிக்க அதிபர், ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் பிரதமர்கள் சந்தித்துப் பேசவுள்ளனர்.

Advertisment

சுற்றுப்பயணத்தின் இறுதிக் கட்டமாக நியூயார்க்கில் உள்ள ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளார்.