
லதா மங்கேஷ்கரின் பிறந்த நாளில் அயோத்தியில் உள்ள சாலைக்கு அவரது பெயர் சூட்டுவது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் இசை குயில் என்று அழைக்கப்பட்ட பழம்பெரும் திரைப்பட பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர், கடந்த பிப்ரவரி மாதம் உடல் நலக்குறைவால் காலமானார். லதா மங்கேஷ்கரின் நினைவாக அயோத்தி நகரில் உள்ள சாலைக்கு அவரது பெயர் சூட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, சாலை உருவாக்கப்பட்டு, லதா மங்கேஷ்கரின் பிறந்த நாளான இன்று அவரது பெயர் சூட்டப்படுகிறது. தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அயோத்தியில் உள்ள சாலைக்கு அவரது பெயரைச் சூட்டுவதில் மகிழ்ச்சி அடைவதாகவும், இந்திய ஆளுமைகளின் ஒருவரான அவருக்கு இது பொருத்தமான மரியாதையாக இருக்கும் என்று கூறியுள்ளார்.