'மன் கி பாத்' என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் இன்று (31/07/2022) காலை 11.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "கரோனாவுக்கு எதிரான நமது நாட்டு மக்களின் போராட்டம் இன்னும் தொடர்கிறது. இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடையும் அற்புதமான, வரலாற்றுத் தருணத்தைக் காணப்போகிறோம். வரும் ஆகஸ்ட் 13- ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15- ஆம் தேதி வரை நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும்.
உலகெங்கிலும் ஆயுர்வேதம் உள்ளிட்ட மருந்துகள் மீதான ஈர்ப்பு அதிகரித்து வருகிறது. சுதந்திர போராட்டத்தில் இந்திய ரயில்வே பங்களிப்பை அறிய வேண்டும். சுதந்திர தினத்தையொட்டி, 24 மாநிலங்களில் உள்ள 75 முக்கிய ரயில் நிலையங்களை அலங்கரிக்கும் பணி நடக்கிறது. அடிமைத் தளத்தில் இருந்து விடுதலை அடைந்திடத் துடிக்கும் தவிப்பு எத்தனை பெரியதாக இருந்திருக்கும்? வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜே முழக்கங்களை உச்சரித்த படி, நமது நாட்கள் கழிந்திருக்கும்.
வருங்கால சந்ததிகளின் பொருட்டு நாமும் நமது வாழ்வை அர்ப்பணித்திருக்கிறோம்; இளமையைத் துறந்திருப்போம். பிரிட்டிஷ் ஆட்சியர் செய்த தவறுக்கு இளைஞர் வாஞ்சிநாதன் தண்டனை வழங்கிய இடம் மணியாச்சி" எனத் தெரிவித்துள்ளார்.