ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க, இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று (26/09/2022) இரவு ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவிற்கு செல்கிறார்.
ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, கடந்த ஜூலை மாதம் 8- ஆம் தேதி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த போது, துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டார். ஜப்பானை அதிக காலம் ஆண்ட என்ற பெருமையைப் பெற்றுள்ள அபேவிற்கு பிரமாண்டமான முறையில் இறுதிச் சடங்குகள் நடத்த அந்நாட்டு அரசுத் திட்டமிட்டுள்ளது.
இறுதிச் சடங்கில் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் உள்ளிட்ட 50 நாட்டு தலைவர்களும் கலந்துக் கொள்ளவுள்ளனர். இந்தியா சார்பில் பிரதமர் நரேந்திர மோடி இறுதிச் சடங்கில் பங்கேறவுள்ளார். மிகுந்த பணிச்சுமை இருப்பினும், தனிப்பட்ட முறையிலும், தனக்கு நெருங்கிய நண்பர் என்பதாலும் ஷின்சோ அபேவின் இறுதிச் சடங்கில் பிரதமர் பங்கேற்கவுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.