Skip to main content

” இது இந்திய விளையாட்டு உலகிற்கு சிறப்பான தருணம்” - பிரதமர் மோடி பாராட்டு

Published on 24/07/2022 | Edited on 24/07/2022

 

Neeraj Chopra

 

அமெரிக்காவில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியானது கடந்த 15ஆம் தேதி முதல் நடைபெற்றுவருகிறது. இன்று நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டியில் 88.13 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்த நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் வென்றார். இதன் மூலம், உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் முதன்முறையாக இந்தியாவிற்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது. நீரஜ் சோப்ராவிற்கு நாடு முழுவதுமிருந்து வாழ்த்துகள் குவிந்துவரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நீரஜ் சோப்ராவை பாரட்டியுள்ளார்.

 

இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, ”உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வரலாற்றுச் சிறப்புமிக்க பதக்கம் வென்றதற்கு வாழ்த்துகள் நீரஜ் சோப்ரா. இது இந்திய விளையாட்டு உலகிற்கு சிறப்பான தருணம். நீரஜ்ஜின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

ஷமியை கட்டி அணைத்த பிரதமர்! - வீடியோ வைரல்! 

Published on 21/11/2023 | Edited on 21/11/2023

 

Prime Minister Narendra Modi met Indian players in dressing room video

 

ஒவ்வொரு கிரிக்கெட் அணியின் கனவாக இருக்கும் உலகக் கோப்பை ஒரு நாள் தொடர், வழக்கம் போல் கோலாகலமாக இந்தாண்டும் தொடங்கியது. தொடக்கத்திலிருந்தே ஒரு போட்டியில் கூட தோற்காமல் இந்திய அணி விளையாடியதால் நிச்சயம் கோப்பையைக் கைப்பற்றுவார்கள் என இந்திய ரசிகர்கள் நம்பிக் கொண்டிருந்தனர். மேலும் இந்தியாவில் இத்தொடர் நடைபெற்றதால் பெரும் ஆசையோடும் இருந்தனர். ஆனால் அவர்களின் நம்பிக்கைக்கு எதிராக இறுதிப் போட்டி அமைந்தது. நேற்று முன்தினம் நடந்த இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்ட இந்திய அணி தோல்வியைத் தழுவியது.  

 

இறுதி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியுற்ற நிலையில், முகமது சிராஜ் மைதானத்திலேயே அழுதார். ரோஹித் ஷர்மா, விராட் கோலி உள்ளிட்டோரும் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தனர். இந்நிலையில் பிரதமர் மோடி, இந்திய அணி வீரர்களை டிரஸ்ஸிங் ரூமில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்திருந்தார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

 

போட்டி முடிந்து இந்திய அணி வீரர்கள் தங்கள் டிரஸ்ஸிங் ரூமில் இருந்தபோது, பிரதமர் மோடி அவர்களை அங்கு சென்று சந்தித்தார். அந்தச் சந்திப்பில் பிரதமர் மோடி, “10 போட்டிகளில் தொடர்ந்து நீங்கள் வெற்றி பெற்றீர்கள். இந்த தோல்வி சாதாரணமானது, இதுபோல் நடக்கும். ஒட்டுமொத்த நாடும் உங்களை பார்த்துக்கொண்டு இருக்கிறது சிரியுங்கள்” என்று தெரிவித்தார். 

 

மேலும், வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியை கட்டி அணைத்து அவரது முதுகில் தட்டிக் கொடுத்து, “இந்தத் தொடரில் நீங்கள் சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தினீர்” என்று பிரதமர் மோடி தெரிவித்தார். 

 

தொடர்ந்து பிரதமர் மோடி, “நீங்கள் அனைவரும் கடுமையாக உழைத்தீர்கள். அனைவரும் இணைந்து இருந்து ஒருவரையொருவர் உத்வேகப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் டெல்லி வரும்போது உங்களை மீண்டும் நான் சந்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

சாதனைகளை குவித்த விராட் கோலி; தலைவர்கள் வாழ்த்து

Published on 15/11/2023 | Edited on 15/11/2023

 

Virat Kohli who accumulated achievements; Greetings leaders

 

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா -  நியூசிலாந்து அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதிரடியாக ஆடிய ரோஹித் 28 பந்துகளில் 47 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடி அரை சதம் கடந்த மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில், காயம் காரணமாக ஆட்டத்தை விட்டு பாதியில் வெளியேறினார். 65 பந்துகளை சந்தித்த கில் 79 ரன்கள் குவித்த நிலையில் வெளியேறினார்.

 

இதையடுத்து வந்த விராட் கோலி நிதானமாக ஆடினார். அரை சதம் கடந்த கோலி 80 ரன்கள் எடுத்த நிலையில் இந்த உலக கோப்பை தொடரில் மொத்தமாக 674 ரன்களை குவித்தார். இதன் மூலம் கடந்த 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற உலககோப்பை தொடரில் சச்சின் டெண்டுல்கர் 11 போட்டிகளில் குவித்த 673 ரன்கள் எனும் சாதனையை முறியடித்தார். ஒரு நாள் உலகப்கோப்பை தொடரில் ஏறத்தாழ 20 ஆண்டுகால சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய கோலி சதத்தை கடந்தார். இதன் மூலம் சச்சினின் மற்றொரு சாதனையான ஒரு நாள் போட்டிகளில் அதிக சதம் (49) விளாசிய வீரர் எனும் சாதனையையும் முறியடித்து 50 ஆவது சதத்தை கடந்தார்.

 

தொடர்ந்து ஆடிய கோலி 117 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிய ஸ்ரேயாஸும் சதத்தைக் கடந்து 70 பந்துகளில் 105 ரன்களை குவித்தார். கடைசிக்கட்ட ராகுலின் அதிரடியான 39 ரன்கள் உதவியுடன் இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 397 ரன்களை குவித்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணிக்கு 398 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது. இந்நிலையில் விராட் கோலி சாதனைக்கு பல்வேறு தரப்பினரும், அரசியல் தலைவர்களும் தங்களது  வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “நம்பமுடியாத சாதனை. 50 ஒருநாள் சதங்கள். விராட் கோலி நீங்கள் ஒரு கிரிக்கெட் அதிசயம். உலகக் கோப்பை அரையிறுதியில் நிகழ்ந்த உங்கள் அபார சாதனைக்கு வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.

 

Virat Kohli who accumulated achievements; Greetings leaders

 

தேமுதிக தலைவர் விஜயகாந்த் எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, உலக கோப்பை தொடரில் மொத்தமாக 674 ரன்களை குவித்தார். இதன் மூலம் கடந்த 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற உலககோப்பை தொடரில் சச்சின் டெண்டுல்கர் 11 போட்டிகளில் குவித்த 673 ரன்கள் எனும் சாதனையை முறியடித்தார். ஒரு நாள் உலகப்கோப்பை தொடரில் 20 ஆண்டுகால சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 50வது சதங்களை விளாசிய முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இது ஒட்டுமொத்த இந்தியர்களும் பெருமை கொள்ளும் தருணமாகும். இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மேலும் மேலும் பல சாதனைகளை படைத்து இந்திய திருநாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

 

பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “இன்று விராட் கோலி ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் தனது 50 வது  சதத்தை அடித்ததோடு மட்டுமல்லாமல், சிறந்த விளையாட்டுத்திறனை வரையறுக்கும் விடாமுயற்சியின் உணர்வையும் எடுத்துக்காட்டுகிறார். இந்த குறிப்பிடத்தக்க மைல்கல். அவரது நீடித்த அர்ப்பணிப்பு மற்றும் திறமைக்கு ஒரு சான்றாகும். அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்கால சந்ததியினருக்கு அவர் ஒரு அளவுகோலை நிர்ணயித்துக்கொண்டே இருக்கட்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

 

Virat Kohli who accumulated achievements; Greetings leaders

 

மத்திய அமைச்சர் அமித்ஷா எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “50வது ஒருநாள் சதம். ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 50 வது சதத்தை அடித்த வரலாற்று மைல்கல்லை எட்டியதற்காக விராட் கோலிக்கு பாராட்டுக்கள். இது உங்களின் சிறந்த விளையாட்டு வீரரின் மனப்பான்மை, அர்ப்பணிப்பு மற்றும் நிலைத்தன்மைக்கு சாட்சி. உங்கள் விளையாட்டை இந்த சாதனை மேலும் புதிய நிலைக்கு உயர்த்தலாம். தேசம் உங்களை நினைத்து பெருமை கொள்கிறது” என தெரிவித்துள்ளார். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்