Prime Minister Modi addresses the nation at 8.45 am!

இந்தியாவில் கரோனாபரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்குப்பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. கரோனாவால்பலியானவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இந்தியாவைப் பொறுத்தமட்டில் மஹாராஷ்ட்ரா, தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் கரோனா மிக வேகமாகப் பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,59,170 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 1,761 பேர் இந்த நோய்த் தொற்று காரணமாகப் பலியாகியுள்ளனர்.

Advertisment

இந்நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அடுத்தடுத்த ஆலோசனையில் பிரதமர் ஈடுபட்டிருந்த நிலையில், இன்று இரவு 8.45 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார். நாடு முழுவதும் கரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் பிரதமர் மோடி நிகழ்த்த உள்ள இந்த உரை முக்கியத்துவம் வாய்ந்ததாகஇருக்கும் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Advertisment