Skip to main content

வேளாண் மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்!

Published on 28/09/2020 | Edited on 28/09/2020
dfg

 

எதிர் கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்குள்ளான வேளாண் மசோதாக்களுக்குக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

 

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட மூன்று விவசாய மசோதாக்களுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் எதிர் கட்சிகளும், விவசாயிகளும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் விவசாயிகள் தரப்பில் 24 முதல் 26-ம் தேதி வரை, ரயில் மறியல் போராட்டங்களும் நடைபெற்றது. இந்நிலையில் பலத்த எதிர்ப்பை சந்தித்துள்ள இந்த வேளாண் மசோதாக்களுக்கு தற்போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். மேலும், அரசிதழிலும் இதுதொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
 

சார்ந்த செய்திகள்