Skip to main content

பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் பதவி விலகல்!

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
The president of Paytm resigned

பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக விஜய் ஷர்மா அறிவித்துள்ளார்.

அந்நிய முதலீடுகள் தொடர்பான விதிமுறைகளை பேடிஎம் பேமென்ட் வங்கி கடைப்பிடிக்கவில்லை எனத் தெரிவித்து பிப்ரவரி 29 ஆம் தேதி முதல் பேடிஎம் வங்கி வாடிக்கையாளர்களிடமிருந்து இருந்து பணத்தைப் பெறுவதற்கு இந்திய ரிசர்வ் வங்கி ஜனவரி 31 ஆம் தேதி தடை விதித்திருந்தது. அந்த உத்தரவில், வங்கிக் கணக்குகளில் புதிய தொகைகள் ஏதும் வரவு வைக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே சமயம் கடன் பரிவர்த்தனைகள், பேடிஎம் கணக்குகளில் பணச் செலுத்துகை, முன்கூட்டிய பணச் செலுத்துகை உள்ளிட்ட வங்கி சேவைகளுக்காக மார்ச் 15 வரை இந்த சேவைகளை தொடர ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளது.

மேலும் பேடிஎம் நிறுவனத்தின் மீது சட்ட விரோதப் பணப் பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இத்தகைய சூழலில் பேடிஎம் நிறுவனம் இறங்குமுகத்தை சந்தித்து வருகிறது. இந்நிலையில் பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக விஜய் சேகர் ஷர்மா அறிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

எம்.பி பதவியை ராஜினாமா செய்த ராகுல் காந்தி!

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
Rahul Gandhi resigned as wayanad MP!

நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி ஆகிய இரு மக்களவை தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலுமே வெற்றியும் பெற்றார். தொடர்ந்து வயநாடு தொகுதியின் எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்வதாக தகவல் வெளியாகியது.

14 நாட்களில் இரண்டு தொகுதிகளில் ஒன்றை ராஜினாமா செய்ய வேண்டுமென்ற நிலை ராகுல் காந்திக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, கட்சி நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு ராகுல்காந்தி வயநாடு தொகுதி எம்.பி பதவியை ராஜினாமா செய்வது என்ற முடிவை நேற்று முன்தினம் (17-06-24) அறிவித்தார். ராகுல்காந்தியின் முடிவை தொடர்ந்து வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்தார்.  

இந்த நிலையில், வயநாடு தொகுதி எம்.பி பதவியை ராகுல் காந்தி நேற்று (18-06-24) அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதாக மக்களவை செயலகம் தெரிவித்துள்ளது. 

Next Story

பதவியேற்ற அடுத்தநாளே ராஜினாமா; சிக்கிம் முதல்வரின் மனைவி அதிரடி

Published on 14/06/2024 | Edited on 14/06/2024
Sikkim Chief Minister's wife Resignation the day after taking MLA oath

நாடாளுமன்றத் தேர்தலுடன் அருணாச்சலப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய நான்கு மாநிலங்களுக்குச் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. 

32 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட சிக்கிம் மாநிலத்தில் பிரேம்சிங் தமாங் தலைமையிலான சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா ஆளும் கட்சியாக இருந்து வந்தது.  32 சட்டமன்ற தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 17 இடங்கள் தேவை என்ற பட்சத்தில், சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா, சிக்கிம் ஜனநாயக முன்னணி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. ஏப்ரல் 19ஆம் தேதி சிக்கிம் மாநிலத்தில் ஒரே கட்டமாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 2ஆம் தேதி எண்ணப்பட்டது. அதில் அதிக பெரும்பான்மையாக 31 இடங்களை சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி கைப்பற்றி இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. 

சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சியின் தலைவர் பிரேம் சிங் தமாங் இரண்டாவது முறையாக அம்மாநிலத்தின் முதல்வராகக் கடந்த 10ஆம் தேதி பதவியேற்றார். இதற்கிடையே, சிக்கிம் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் முதல்வரின் மனைவி கிருஷ்ண குமார் ராய், நாம்சி-சிங்கிதாங் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனையடுத்து, நேற்று முன் தினம் (12-06-24) சிக்கிம் மாநில சட்டசபையில் நடந்த பதவியேற்பு விழாவில், முதல்வரின் மனைவி கிருஷ்ண குமார் ராய் எம்.எல்.ஏவாக பதவியேற்றார். 

Sikkim Chief Minister's wife Resignation the day after taking MLA oath

இந்த நிலையில், கிருஷ்ண குமாரி ராய் நேற்று (13-06-24) திடீரென்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். கிருஷ்ண குமாரி ராயின் ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதாகச் சட்டசபை செயலாளர் உறுதி செய்தார். பதவியேற்ற அடுத்த நாளே சிக்கிம் மாநில முதல்வரின் மனைவி தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.