
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரும், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரும் இரண்டு வாரங்களுக்கு முன்பு சந்தித்தனர். தேசியவாத காங்கிரஸுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக பிரசாந்த் கிஷோர் கூறினார். இருப்பினும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் எதிர்கட்சிகளை ஒன்றிணைப்பது குறித்து இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்தநிலையில், நேற்று (20.06.2021) இரவு மீண்டும் இருவரும் சந்தித்துக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் எதிர்கட்சிகளை ஒன்றிணைப்பது குறித்தும், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மம்தா பானர்ஜியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் நடந்த மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலின்போது, வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்த்து மம்தாவோ, திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளரோ களமிறங்குவார் என மறைமுகமாக தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஐ-பேக் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 2024 நாடாளுமன்ற தேர்தல்வரை நீட்டித்துள்ளது இங்கே கவனிக்கத்தக்கது.