இந்தியாவில் கரோனாபரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி கரோனாஉறுதி செய்யப்படுபவர்களின்எண்ணிக்கை இரண்டு லட்சத்தைக் கடந்துள்ளது. இதனால், பல்வேறு மாநிலங்களில், கரோனாபரவலை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இந்தநிலையில், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கரோனாதொற்று உறுதியாகியுள்ளது. இதனைத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளஅவர், தன்னோடு கடந்த இரண்டு மூன்று நாட்களாக தொடர்பில் இருந்தவர்களை கரோனாபரிசோதனைசெய்துகொள்ளுமாறுஅறிவுறுத்தியுள்ளார்.
இன்று கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா,காங்கிரஸின் பொதுச்செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலாஆகியோருக்கும் கரோனா உறுதிசெய்யப்பட்டது. எடியூரப்பாவிற்கு இரண்டாவது முறையாக கரோனா உறுதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.