Pragyan Rover photo taken the Vikram lander

Advertisment

இந்தியா சார்பில் நிலவின் தென் பகுதியை ஆராயக் கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான் - 3, நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு ஆகஸ்ட் 23 மாலை நிலவின் தென் துருவத்தில் இறங்கி சாதனை படைத்தது.

இதனையடுத்து, நிலவில் தென் துருவத்தில் ஆய்வு தொடர்பான ரகசியங்களைத் தேடும் பணியை பிரக்யான் ரோவர் தொடங்கி நகர்ந்து வருகிறது. ரோவரில் பொருத்தப்பட்டுள்ள கருவிகள், மண்ணில் உள்ள உலோகங்கள் பற்றிய விபரங்கள், அதன் தன்மையைப் பற்றியும் பரிசோதிக்க உள்ளது என இஸ்ரோ தெரிவித்திருந்தது. மேலும் பிரக்யான் ரோவர் நகர்ந்து சென்று ஆய்வுப் பணியை மேற்கொள்ளும் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டிருந்தது. பெங்களூரில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் ரோவரின் செயல்பாடுகள் மற்றும் அது மேற்கொள்ளும் ஆய்வுகள் குறித்த தகவல்களைக் கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரக்யான் ரோவர், இன்று (30.08.2023) காலை 7.35 மணியளவில் சந்திராயன் 2 திட்டத்தின் கீழ் அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டரை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. இந்த படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. மேலும் பிரக்யான் ரோவரில் உள்ள நேவிகேசன் என்ற அதிநவீன கேமரா மூலம் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டிருப்பதாக இஸ்ரோ தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.